Wednesday, December 5, 2012

ஏலத்தில் விடப்படும் நெப்போலியனின் கடிதம்



 
பிரஞ்சு பேரரசர் நெப்போலியன் போனபார்ட் அவர்கள் 200 வருடங்களுக்கு முன்னதாக எழுதிய கடிதம் ஒன்று பாரிசுக்கு அருகே ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

1812 இல் பெருந்தோல்வியில் முடிந்த ரஷ்யா மீதான ஆக்கிரமிப்பின் போது இந்தக் கடிதத்தை நெப்போலியன் அவர்கள் தனது வெளியுறவு அமைச்சருக்கு எழுதியிருந்தார்.

கிரம்லினில் உள்ள கோட்டை கொத்தளங்களுடன் கூடிய மாளிகையை எப்படியாவது தகர்த்துவிட வேண்டும் என்ற தனது விருப்பத்தை அதில் நெப்போலியன் குறிப்பிட்டிருக்கிறார்.

நெப்போலியனின் படைகள் ஆட்களே இல்லாமல் கைவிடப்பட்ட ரஷ்ய தலைநகரை அடைந்தபோது, அங்கு குளிர்ப்பனிக்காலமும் ஆக்கிரமித்துக் கொள்ளவே, பிரஞ்சுப் படைகளுக்கான விநியோக பாதையும் அடைபட்டு விட்டது.

இந்த நிலையில் பிரஞ்சுப் படைகள் தமது ரஷ்ய ஆக்கிரமிப்பில் தோல்வியை தழுவத் தொடங்கியிருந்தன.

ஆனால், அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக அவர்கள் கிரம்லின் ஆட்சிபீடத்தின் கோட்டை கொத்தளங்களுடன் கூடிய மாளிகை வளாகத்தை நிர்மூலம் செய்து விட்டு வெளியேற நினைத்தனர்.

அது குறித்துத்தான் நெப்போலியன் அந்தக் கடிதத்தில் தனது அமைச்சருக்கு எழுதியுள்ளார்.

ஆனால், அவரால், அந்த மாளிகையின் பல கோபுரங்களையும், சுவரையும் மற்றும் அங்கிருந்த வெடிமருந்தையுந்தான் நிர்மூலம் செய்ய முடிந்தது.

No comments:

Post a Comment