கடந்தகாலத்தில் அரியலூர் பகுதி ஆழ்கடலுக்குள் மூழ்கியிருந்தபோது
அங்குவாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் பாசில்ஸ் எனப்படும் அரியவகை
தொல்படிமங்கள் அந்த பகுதியின் சிமெண்ட் தொழிற்சாலைகளால் அழிந்துவருவதாக
கவலைகள் அதிகரித்துவருகின்றன.
தமிழ்நாட்டின்
வறட்சியான மாவட்டங்களில் ஒன்றாக பரவலாக பார்க்கப்படும் இன்றைய அரியலூர்
மாவட்டத்தின் பெரும்பகுதி கிரேடேஷியஸ் யுகத்தில் (அதாவது 65 முதல் 146
மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) கடலுக்கடியில் முழ்கியிருந்தது என்பது
பலருக்கும் பெரிதும் தெரியாத செய்தி.
ஆனால் உலகின் பல நாடுகளைச்சேர்ந்த புவியியல்
நிபுணர்கள் மத்தியில் அரியலூரில் கிடைக்கும் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின்
பாசில்ஸ் எனப்படும் படிமங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஏறக்குறைய 60
ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிலவியல் மற்றும் கடலியல் நிபுணர்கள் இந்த
படிமங்களை கண்டறிவதிலும், வகைப்படுத்துவதிலும், ஆராய்வதிலும்
ஈடுபட்டுவருகிறார்கள்.
அதேசமயம், அரியலூரில் செயற்பட்டுவரும் சிமெண்ட்
தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருளை வெட்டியெடுக்கும்போது இந்த அரியவகை
படிமங்களும் அழிவதாக கூறப்படுகிறது.
இப்படி அழிந்துவரும் அரியவகை கடல்வாழ்
உயிரினங்களின் தொல்படிமங்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்
அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆய்வாளர் எஸ் எம் சந்தரசேகர். கடந்தகாலத்தில்
அரியலூர் பிரதேசம் ஆழ்கடலுக்குள் சென்றதன் பின்னணி குறித்தும், அங்கு
தற்போது காணப்படும் கடல்வாழ் உயிரினங்களின் அரியவகை படிமங்கள் குறித்தும்
பிபிசி தமிழோசைக்கு அவர் அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
No comments:
Post a Comment