Friday, December 14, 2012

வரலாற்றில் இன்று - டிசம்பர் 14


  • இந்தியா - எரிபொருள் சேமிப்பு நாள்
  • உலகக் குழந்தைகள் தொடர்பு நாள்
  • 1287 - நெதர்லாந்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர் சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
  • 1542 - இளவரசி மேரி ஸ்டுவேர்ட் முதலாம் மேரி என்ற பெயரில் ஸ்கொட்லாந்தின் அரசியானாள்.
  • 1819 - அலபாமா ஐக்கிய அமெரிக்காவின் 22வது மாநிலமானது.
  • 1899 - யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது.
  • 1900 - மாக்ஸ் பிளாங்க் தனது கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய கொள்கையை நிறுவினார்.
  • 1903 - ரைட் சகோதரர்கள் தமது வான்வெளிப் பயணத்தை முதற்தடவையாகச் சோதித்தனர்.
  • 1911 - ரோல்ட் அமுண்ட்சென் தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றனர்.
  • 1918 - பின்லாந்தின் மன்னனாக ஜெர்மனியின் இளவரசன் பிறீட்ரிக் கார்ல் வொன் ஹெஸ்சென் தெரிவுசெய்யப்பட்டான்.
  • 1939 - நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது.
  • 1941 - உக்ரேனின் கார்க்கிவ் நகரின் நாசி ஜேர்மனியத் தளபதி யூதர்கள் அனைவரும் நகரை விட்டு 2 நாட்களில் வெளியேற உத்தரவிட்டான். அடுத்த இரு நாட்களில் சுமார் 15,000 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் தாய்லாந்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.
  • 1946 - ஐநாவின் தலைமையகத்தை நியூயோர்க் நகரில் அமைக்க முடிவாகியது.
  • 1962 - நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளி கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.
  • 1967 - DNA எனப்படும் மரபணுக்கூறை முதல் முறையாக சோதனைக் குழாயில் உருவாக்கிக் காட்டினர் விஞ்ஞானிகள்
  • 1972 - அப்பல்லோ 17: யூஜின் சேர்னன் சந்திரனில் நடந்த கடைசி மனிதர் ஆனார்.
  • 2003 - சதாம் உசேன் கைப்பற்றப்பட்ட செய்தியை ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
  • 2003 - பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் கொலை முயற்சி ஒன்றிலிருந்து உயிர் தப்பினார்.
  • 2004 - தென் பிரான்சில் வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது.

Friday, December 7, 2012

வரலாற்றில் இன்று- Today in History- டிசம்பர் 8


  • மனநிலை குறைபாடுடையோர் நாள்.
  • 1609 - இத்தாலியின் மிலான் நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் ஆகும்
  • 1864 - இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது.
  • 1877 - நியூசிலத்தின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்றார் திருமதி Jenny Shipley.
  • 1912 - அல்பேனியாவின் "கோர்சே" நகரை ஓட்டோமான் படையிடம் இருந்து கிரேக்கர்கள் கைப்பற்றினர்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் ஹொங்கொங், மலாயா ஆகியவற்றைத் தாக்கினர்.
  • 1941 - பசிபிக் போர்: பேர்ள் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா ஜப்பான் மீது போரை அறிவித்தது.
  • 1941 - ஜப்பானியர்கள் சிங்கப்பூரை குண்டு வீசித் தாக்கத் தொடங்கினர்.
  • 1941 - பசிபிக் போர்: சீனக் குடியரசு ஜப்பான் மீது போரை அறிவித்தது.
  • 1941 - பெரும் இன அழிப்பு: போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்களைக் கொல்லுவதற்கு நாசிகள் முதன் முதலாக நச்சு வாயுப் பேருந்தைப் பயன்படுத்தினர்.
  • 1942 - பெரும் இன அழிப்பு: உக்ரைனின் "டேர்னோப்பில்" என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் அங்கிருந்த 1,400 ப்பெரடங்கிய கடைசித் தொகுதி யூதர்களை பெல்செக் வதை முகாமிற்கு அனுப்பினர்.
  • 1949 - சீனக் குடியரசின் தலைநகர் நான்சிங்கில் இருந்து தாய்பெய் நகருக்கு மாற்றப்பட்டது.
  • 1953 - அணு அமைதிக்கே என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.
  • 1985 - சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது.
  • 1987 - பெருவின் தலைநகர் லீமாவுக்கருகில் சென்று கொண்டிருந்த விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் அதில் பயணஞ்செய்த பெருவின் உதைபந்தாட்ட அணியொன்றின் அனைத்து வீரர்களும் கொல்லப்பட்டனர்.
  • 1991 - சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ், உக்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.

Thursday, December 6, 2012

வரலாற்றில் இன்று - Today in History- டிசம்பர் 7

  • அனைத்துலக விமானப் போக்குவரத்து நாள்.
  • 1787 - டெலவெயர் 1வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
  • 1900 - மாக்ஸ் பிளாங்க் தனது பேர்லின் இல்லத்தில் வைத்து புகழ்பெற்ற கரும்பொருள் வெளியேற்ற விதியைக் கண்டுபிடித்தார்.
  • 1910 - யாழ்ப்பாணம், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.
  • 1917 - முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா-ஹங்கேரி மீது ஐக்கிய அமெரிக்கா போரை அறிவித்தது.
  • 1917 - தமிழத் தென்றல் திரு வி.க. ஆசிரியராகப் பொறுப்பேற்ற தேசபக்தன் வார இதழ் வெளிவரத் தொடங்கியது.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர் ஹவாயின் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கினர்.
  • 1949 - சீனக் குடியரசின் அரசு நான்கிங் நகரில் இருந்து தாய்வானுக்கு மாறியது.
  • 1971 - பாகிஸ்தானில் நூருல் அமீன் பிரதமராகவும் சுல்பிக்கார் அலி பூட்டோவை உதவிப் பிரதமராகவும் கொண்ட கூட்டணி அரசை அதிபர் யாகியா கான் அறிவித்தார்.
  • 1972 - அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் "அப்போலோ 17" சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
  • 1975 - கிழக்குத் தீமோரை இந்தோனீசியா முற்றுகையிட்டது.
  • 1988 - யாசர் அரபாத் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தார்.
  • 1991 - Carl Lewis க்கு திடல்தட வீரர்களுக்கான Jesse Owens விருது வழங்கப்பட்டது
  • 1995 - கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.

Wednesday, December 5, 2012

வரலாற்றில் இன்று - Today in History - டிசம்பர் 6


  • 1060 - முதலாம் பேலா ஹங்கேரியின் மன்னனாக முடிசூடினான்.
  • 1240 - உக்ரைனின் கீவ் நகரம் மங்கோலியரிடம் வீழ்ந்தது.
  • 1768 - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.
  • 1790 - ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது.
  • 1865 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது.
  • 1877 - வாஷிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகை முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
  • 1884 - வாஷிங்டன் டிசியில் வாஷிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது.
  • 1897 - வாடகை வாகனம் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டது.
  • 1917 - பின்லாந்து ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1926 - பிரான்சில் பனிமழை பெய்தது. வெள்ளையாகப் பெய்ய வேண்டிய பனி மழை கறுப்பாகப் பெய்ததுதான் அதிசயம்.
  • 1957: வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்துச் சிதறியது.
  • 1921 - இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
  • 1922 - ஐரிய சுதந்திர நாடு உருவானது.
  • 1957 - வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது செய்மதி அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.
  • 1971 - இந்தியா வங்காள தேசத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது.
  • 1977 - தென்னாபிரிக்கா பொப்புதட்ஸ்வானாவுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.
  • 1985 - உலகிலேயே மிக அதிகமாக விற்பனையானது என்ற சாதனையைச் செய்து தனது பெயரையும் கின்னஸ் புத்தகத்தில் இணைத்துக் கொண்டது கின்னஸ் புத்தகம்.
  • 1992 - அயோத்தியாவில் 16ம் நூற்றாண்டு பழமைவாய்ந்த பாபர் மசூதி இந்துத் தீவிரவாதிகளால் இடித்து அழிக்கப்பட்டது.
  • 2006 - செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.

வரலாற்றில் இன்று - Today in History - டிசம்பர் 5


  • உலகத் தொண்டர் நாள்.
  • 1360 - பிரெஞ்சு நாணயம் பிராங்க் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1492 - கொலம்பஸ் ஹிஸ்பனியோலா தீவை அடைந்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே.
  • 1746 - ஸ்பானிய ஆட்சிக்கெதிராக ஜெனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது.
  • 1848 - கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் போக் அறிவித்தார்.
  • 1863 - இங்கிலாந்தில் கால்பந்தாட்டத்திற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டன.
  • 1893 - மின்சாரத்தில் இயங்கும் தானுந்து அறிமுகமானது.
  • 1896 - சென்னை கன்னிமாரா பொது நூலகம் ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக் என்பவரால் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
  • 1933 - யூட்டா 36வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
  • 1936 - சோவியத் ஒன்றியம் தனது புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. கிர்கிஸ்தான் சோவியத் ஒன்றியத்திற்குள் முழுமையான குடியரசாக அறிவிக்கப்பட்டது.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, ஹங்கேரி, ருமேனியா நாடுகளின் மீது பிரித்தானியா போரை அறிவித்தது.
  • 1958 - STD தொலைபேசி இணைப்பு சேவை ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1969 - அமெரிக்க படைத்துறை உயர் ஆய்வு நிறுவனத்தால் இணையம் நிறைவேறியது.
  • 1969 - மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது.
  • 1983 - ஆர்ஜெண்டீனாவில் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.
  • 1995 - இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் முழுமையாகக் கைப்பற்றியதாக அறிவித்தது.
  • 2003 - இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர்திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது.
  • 2006 - பிஜியில் இராணுவப் புரட்சி மூலம் அதன் இராணுவத் தளபதி வொரெக் பைனிமரமா அரசைக் கைப்பற்றினார்.
  • 2006 - இந்திய நடுவண் அரசில் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த சிபு சோரன் 1994 இல் அவரது உதவியாளரைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

கண்ணம் ஸ்டைல் படைத்தது யூடியூப் சரித்திரம்














கொரியாவின் ராப் இசைக் கலைஞர் சை(Psy)யின் பிரபல கண்ணம் ஸ்டைல்(Gagnam style) பாடலின் வீடியோதான், யூடியூப் (Youtube) வீடியோ சேவை இணையதளத்தின் சரித்திரத்தில் மிக அதிகம் தடவைகள் பார்க்கப்பட்ட ஒரு வீடியோ என்ற சாதனையைப் படைத்துள்ளது.


மொத்தத்தில் 80 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான தடவைகளில் கடந்த நான்கு மாதங்களில் இந்த வீடியோவை ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர்.
தென்கொரியத் தலைநகர் சோலின் செழிப்புமிக்க பகுதி ஒன்றில் மக்கள் எந்த அளவுக்கு நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்கிப் போயுள்ளார் என்பதை நையாண்டி செய்யும் பொருளில் அமைந்த பாடல் இது.

குதிரை சவாரி செய்பவரைப் போன்ற நடன அசைவு கொண்ட இப்பாடலின் வீடியோ அனைவரையில் வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு பிரபலம் அடைந்தது.
பல்வேறு உலகக் கலைஞர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த நடனத்தை ஆடி ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருந்தனர்.
இந்த ஒரே பாடலின் மூலமாக 34 வயது பாடகர் சை பெரும் பிரபலம் அடைந்துள்ளார்.

ஏலத்தில் விடப்படும் நெப்போலியனின் கடிதம்



 
பிரஞ்சு பேரரசர் நெப்போலியன் போனபார்ட் அவர்கள் 200 வருடங்களுக்கு முன்னதாக எழுதிய கடிதம் ஒன்று பாரிசுக்கு அருகே ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

1812 இல் பெருந்தோல்வியில் முடிந்த ரஷ்யா மீதான ஆக்கிரமிப்பின் போது இந்தக் கடிதத்தை நெப்போலியன் அவர்கள் தனது வெளியுறவு அமைச்சருக்கு எழுதியிருந்தார்.

கிரம்லினில் உள்ள கோட்டை கொத்தளங்களுடன் கூடிய மாளிகையை எப்படியாவது தகர்த்துவிட வேண்டும் என்ற தனது விருப்பத்தை அதில் நெப்போலியன் குறிப்பிட்டிருக்கிறார்.

நெப்போலியனின் படைகள் ஆட்களே இல்லாமல் கைவிடப்பட்ட ரஷ்ய தலைநகரை அடைந்தபோது, அங்கு குளிர்ப்பனிக்காலமும் ஆக்கிரமித்துக் கொள்ளவே, பிரஞ்சுப் படைகளுக்கான விநியோக பாதையும் அடைபட்டு விட்டது.

இந்த நிலையில் பிரஞ்சுப் படைகள் தமது ரஷ்ய ஆக்கிரமிப்பில் தோல்வியை தழுவத் தொடங்கியிருந்தன.

ஆனால், அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக அவர்கள் கிரம்லின் ஆட்சிபீடத்தின் கோட்டை கொத்தளங்களுடன் கூடிய மாளிகை வளாகத்தை நிர்மூலம் செய்து விட்டு வெளியேற நினைத்தனர்.

அது குறித்துத்தான் நெப்போலியன் அந்தக் கடிதத்தில் தனது அமைச்சருக்கு எழுதியுள்ளார்.

ஆனால், அவரால், அந்த மாளிகையின் பல கோபுரங்களையும், சுவரையும் மற்றும் அங்கிருந்த வெடிமருந்தையுந்தான் நிர்மூலம் செய்ய முடிந்தது.

அழிந்துவரும் அரியலூர் ஆழ்கடல் படிமங்கள்











கடந்தகாலத்தில் அரியலூர் பகுதி ஆழ்கடலுக்குள் மூழ்கியிருந்தபோது அங்குவாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் பாசில்ஸ் எனப்படும் அரியவகை தொல்படிமங்கள் அந்த பகுதியின் சிமெண்ட் தொழிற்சாலைகளால் அழிந்துவருவதாக கவலைகள் அதிகரித்துவருகின்றன.

தமிழ்நாட்டின் வறட்சியான மாவட்டங்களில் ஒன்றாக பரவலாக பார்க்கப்படும் இன்றைய அரியலூர் மாவட்டத்தின் பெரும்பகுதி கிரேடேஷியஸ் யுகத்தில் (அதாவது 65 முதல் 146 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) கடலுக்கடியில் முழ்கியிருந்தது என்பது பலருக்கும் பெரிதும் தெரியாத செய்தி.

ஆனால் உலகின் பல நாடுகளைச்சேர்ந்த புவியியல் நிபுணர்கள் மத்தியில் அரியலூரில் கிடைக்கும் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் பாசில்ஸ் எனப்படும் படிமங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிலவியல் மற்றும் கடலியல் நிபுணர்கள் இந்த படிமங்களை கண்டறிவதிலும், வகைப்படுத்துவதிலும், ஆராய்வதிலும் ஈடுபட்டுவருகிறார்கள்.

அதேசமயம், அரியலூரில் செயற்பட்டுவரும் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருளை வெட்டியெடுக்கும்போது இந்த அரியவகை படிமங்களும் அழிவதாக கூறப்படுகிறது.

இப்படி அழிந்துவரும் அரியவகை கடல்வாழ் உயிரினங்களின் தொல்படிமங்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆய்வாளர் எஸ் எம் சந்தரசேகர். கடந்தகாலத்தில் அரியலூர் பிரதேசம் ஆழ்கடலுக்குள் சென்றதன் பின்னணி குறித்தும், அங்கு தற்போது காணப்படும் கடல்வாழ் உயிரினங்களின் அரியவகை படிமங்கள் குறித்தும் பிபிசி தமிழோசைக்கு அவர் அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

புகைப்பழக்கம் மூளையையும் மழுங்கடிக்கிறது: புதிய ஆய்வு




புகைப்பழக்கம் உடல் நலத்தை பாதிப்பதோடு அறிவு நலத்தையும் கெடுப்பதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.



நினைவாற்றலையும், பகுத்தாயும் ஆற்றலையும், கல்வி ஆற்றலையும் சேதப்படுத்துவதன் மூலம் புகைப்பழக்கம் மூளையை "அழுகச் செய்கிறது" என லண்டன் கிங்ஸ் காலெஜை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அளவுக்கதிகமான உடல் எடையும் இரத்த அழுத்தமும்கூட மூளையைப் பாதிக்கின்றன; ஆனால் அவை புகைப்பழக்கம் அளவுக்கு இல்லை என்று 8,800 பேரிடம் நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
நமது பழக்க வழக்கங்கள் நமது உடல் ஆற்றலை எவ்வாறு பாதிக்கின்றனவோ அதேபோல நமது சிந்தனை ஆற்றல்களையும் பாதிக்கின்றன என்பதை மக்கள் உணர வேண்டும் என இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானி ஒருவர் தெரிவிக்கிறார்.

ஏஜ் அண்ட் ஏஜிங் என்ற மருத்துவ சஞ்சிகையில் இவர்களது ஆய்வின் முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

மாரடைப்பு, மூளையில் ரத்தக் கசிவு போன்ற நோய்களுக்கும் மூளையின் ஆரோக்கியத்துக்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா என்பதை கிங்ஸ் காலேஜ் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

ஆய்வு முறை

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் பலரின் உடல் ஆரோக்கியம், பழக்க வழங்க்கங்கள் ஆகியவற்றையும் அவர்களுடைய மூளையின் ஆரோக்கியத்தையும் ஒரே நேரத்தில் ஆய்வாளர்கள் பரிசோதித்தனர்.
புதிய வார்த்தைகளையோ கற்றுக்கொள்கிறார்களா என்பதற்கான பரிசோதனை, ஒரு நிமிடத்தில் எத்தனை பெயர்களை, எத்தனை விலங்குகளின் பெயர்களை சொல்லமுடிகிறது என்ற பரிசோதனை போன்றவற்றின் மூலம் இவர்களுடைய மூளையின் ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டது.

எட்டு ஆண்டுகள் கழித்து இதே நபர்களிடம் இதே உடல் மற்றும் மூளை பரிசோதனைகள் மீண்டும் நடத்தப்பட்டு முடிவுகள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன.

மூளையின் ஆரோக்கியம் குன்றிப்போனவர்களிடையே மாரடைப்பு
அபாயமும், மூளையில் ரத்தக் கசிவு அபாயமும் அதிகமாக உள்ளது என முடிவுகள் காட்டியிருக்கின்றன.

தவிர மூளை ஆற்றல் பரிசோதனைகளில் ஒருவர் குறைந்த புள்ளிகள் வாங்குவதற்கும் புகைப்பழக்கத்துக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்பதையும் இந்தப் பரிசோதனைகள் காட்டியுள்ளன.

Monday, December 3, 2012

முதலாளித்துவத்தின் முகமூடியைக் கிழிக்கும் “கார்ப்பரேட்”

“மாற்று சினிமாவுக்கான முயற்சிகளும், சமூக சிந்தனையுள்ள படங்களும் இந்தித் திரையுலகிலும் உண்டு என்றால் நம்ப மறுப்பவரா நீங்கள்! நானிருக்கும் வரை அந்த முடிவை ஒத்தி வையுங்கள்” என்கிறார் இயக்குநர் மதூர் பண்டார்கர். ஏற்கெனவே தான் எடுத்த ‘மூன்றாம் பக்கத்’தின் (Page 3) மூலம் இந்தியத் திரையுலகையே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். கடந்த ஆண்டு அவர் இயக்கி வெளியிட்ட படம் ‘கார்ப்பரேட்’ (Corporate). 2006 கோவா திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் இப்படம் திரையிடப்பட்டது.

2005ஆம் ஆண்டு திரைப்பட விழாவின் விவாத அரங்கு ஒன்றில் கலந்து கொண்டபோது பண்டார்கரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், “ஏன் எதையெடுத்தாலும் பிரச்சினைகளை நோக்கியே கொண்டு செல்கிறீர்கள். வணிக சினிமாவுக்கு வரும் எண்ணம் இல்லையா?” என்று “வணிக சினிமா என்றில்லை, நல்ல படங்கள் சமூக சிந்தனையுடையவை வெற்றி பெற்றால் அவையும் வணிகப் படங்கள்தான். அந்த வகையில் அய்ட்டம் நம்பர் வைக்காத, ஹீரோக்களை நம்பாத, கதையம்சத்தோடு கூடிய வணிகப் படங்களாக என் படங்கள் இருக்கும். கார்ப்பரேட்டும் அப்படித்தான். ‘கார்ப்பரேட்’ உலக மறு பக்கத்தைக் காட்டும்” என்று தெளிவாக பதில் தந்தார் மதூர்.

சீகல் குரூப் மற்றும் மார்வா குரூப் இரண்டுக்கும் இடையிலான தொழில் போட்டியில் நகர்ந்து செல்கிறது கதை. பாரம்பரிய பணக்காரரான மார்வா குரூப் முதலாளி தர்மேஷ் மார்வாவாக ராஜ் பாப்பரும், சீகல் முதலாளி வினய்சீகலாக ரஜத் கபூரும், தொழிலில் தோல்வியடைந்து லண்டனில் இருந்த இருந்து திரும்பிவரும் சீகலின் மைத்துனர் ரித்தேஷாக கே.கே.-மேனனும் நடித்துள்ளனர். கவர்ச்சிக்காவும், அய்ட்டம் நம்பராகவும் பயன்படுத்தப்பட்ட ‘பிபாஷா பாசு’ இப்படத்தின் அடித்தளமான கதாபாத்திரத்தில் ‘நிஷி கந்தா தாஸ்குப்தா’வாக பொருத்தமான வேடத்தில் நடித்துள்ளார்.

சீகல் குழுமத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான நிஷிகந்தாவும், ரித்தேஷும் முன்னாள் காதலர்கள்.மகாராஷ்டிராவின் பொதுத்துறை நிறுவனமாக இருந்த குளிர்பான தொழிற்சாலை ஒன்றை விலைக்கு வாங்குவதில் சீகல் மற்றும் மார்வா நிறுவனங்கள் தங்களுக்குள் மோதுகின்றன. இதில், மாநில நிதியமைச்சருக்கு ரொம்பப் பிடித்தமான பாலிவுட் அய்ட்டம் நடிகையை ‘ஏற்பாடு’ செய்வித்து அத்தொழிற் சாலையை கைப்பற்றுகிறது ‘மார்வா’ நிறுவனம்.

இந்நிலையில், இங்கிலாந்திலிருந்து வணிகத்தில் தோற்றுத் திரும்பும் ரித்தேஷ் தன்னை நிரூபிக்க வேண்டியவராகிறார். அவருக்கு உதவவும், வணிகத்தை நிலை நிறுத்தவும் களமிறங்கும் நிஷி கந்தா, மார்வா நிறுவனத்தின் முக்கிய அலுவலர் ஒருவரை ஏமாற்றி,(அவரை மயக்க ஒரு பெண்ணை அனுப்பி) அவரிடமிருந்து ரகசியம் ஒன்றை திருடுகிறார். மாநில அரசிடமிருந்து வாங்கிய குளிர்பான தொழிற்சாலையில் ‘மின்ட்’ சுவையிலான கோலா பானம் ஒன்றினைத் தயார் செய்ய மார்வா நிறுவனம் தீட்டிய திட்டத்தை அதன்மூலம் தெரிந்து கொண்ட சீகல் நிறுவனம் வெகு விரைவில் அவர்களுக்கு முன்னதாகவே கோலா வகை பானத்தை ‘Just Chill’ என்ற பெயரில் வெளியிட முடிவு செய்து செயலாற்றுகிறது. அந்தப்பணி, ரித்தேஷ் மற்றும் நிஷி ஆகியோரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதில் வென்று காட்டுவது என்ற முடிவோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, அவ்வாண்டின் ‘சிறந்த தொழிலதிபர்’ விருதுக்காக பட்டியலிலும் மார்வாவும் சீகலும் மோதுகிறார்கள். பெரிய இடத்துக்கு ‘ஏற்பாடு’ செய்பவரின் மூலம் தனக்கு அந்த விருது கிடைக்க வழி பார்க்கிறார் சீகல். தனக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர் இருக்க சத்தமில்லாமல் விருது பெறுகிறார் மார்வா. இதனால் கோபமடையும் சீகல், மறுநாளே தாங்கள் தயாரிக்கப்போகும் பானம் வெளியிடப்படும் தேதியை அறிவிக்கிறார்.

தங்களின் ரகசியத் திட்டம் அம்பலமானதை அறிந்து அதற்குக் காரணம் நிஷியின் சூழ்ச்சி வலையில் விழுந்த தம் குழும அதிகாரிதான் என்பதையறிந்து அவரை பணியிலிருந்து விரட்டுகிறது மார்வா குழுமம்.தன் நிறுமப் பங்குகளை வளைக்கவும், விரைவில் நிலையற்ற தன்மையை உண்டாக்கவும், சீகல் குழுமம் மேற்கொண்ட குறுக்கு வழிகளை திருப்பியடிக்கிறது மார்வா. பாரம்பரிய தொழிலதிபர் மார்வா ‘குருஜி’ எனப்படும் சாமியாரின் தீவிர பக்தர். சாமியார் சொல்லும் நிறத்தில் கல் மோதிரம் அணிவதிலிருந்து, தேதி குறிப்பது வரை அனைத்தும் செய்பவர் மார்வா. அதே குருஜியின் சீடர்களில் ஒருவர்தான் பங்கு வணிகச் சூதாடியாக ஏற்கனவே சீகலுக்காக உழைத்தவர். சாமியாரின் உதவியுடன் அவரை அணுகி தங்களுக்கு ‘உழைக்க’ வைக்கிறார். பொருளை வெளியிடும் காலம் நெருங்குகிறது. புதிய குளிர்பானத்தின் தரத்தை சோதனை செய்வதற்காக வரும் தரச்சான்று குழுவினர், குளிர்பானத்தில் பூச்சி மருந்துகளின் விகிதம் அதிகம் இருப்பதாக, அறிக்கை தருகின்றனர். இதனைக் கருவிலேயே அழிக்கிறார் சீகல். மக்களுக்குக் கேடான இந்த பானத்தை வெளிக் கொண்டுவருவது ஆபத்து என்று கூறி சீகல் நிறுவனத்தின் ஆலோசகர் பதவி விலகுகிறார். 
 
அதுபற்றிக் கவலைப்படாமல் புதிய பானம் அறிமுகமாகிறது.

பூச்சிக்கொல்லி கலந்திருப்பது மார்வா நிறுவனத்திற்குத் தெரியவர, அது மாநில அமைச்சர் மூலம் அதிரடி ரெய்டையும், தொண்டு நிறுவனங்களுக்குக் காசு கொடுத்து போராட்டத்தையும் ஊக்குவிக்கிறது. தங்களின் புதிய பானத்திற்கு ஏற்பட்ட சிக்கலை கவலையுடன் எதிர்நோக்குகிறார்கள் நிஷியும் ரிதேஷூம். சிக்கல் தீவிரமாகி அதற்காக சீகல் நிறுவன அதிபர் கைது செய்யப்பட வேண்டும் என்ற நிலை வர, தலைமைப் பொறுப்பில் ‘நிஷி’யை நிறுத்தி ‘பலிகடா’வாக அவளை சிறைக்கு அனுப்பிவிடுகிறார்கள். இதற்கு ரிதேஷ் ‘தன் குழந்தையைக் கருவில் சுமக்கிறாள் நிஷி’ என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தும் வேறு வழியின்றி ஒப்புக் கொள்கிறான்.

மார்வா நிறுவனத்துடன் சமரசத்துக்கு வருமாறு சீகல் நிறுவனத்தை அழைக்கிறார்கள் மத்திய + மாநில நிதி அமைச்சர்கள். சமரசத்தில் இனி ஒருவர் வியாபாரத்தில் மற்றொருவர் தலையிடுவதில்லை என்று ஒப்பந்தம் ஏற்படுகிறது. ஆனால் ‘நிஷி’யின் வழக்கை அப்படியே விட்டுவிடுகிறோம். இப்போது கவலையில்லை. தேர்தல் நேரத்தில் வழக்கை வாபஸ் பெற முடியாது. மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்கிறார்கள் இதில் கோபமடையும் ரித்தேஷ் தனது மைத்துனரான வினய்-யிடம் “விரைவில் நிஷி வெளிவரவில்லையானால் ரகசியங்களை வெளியிட்டு விடுவேன்” என்று சீற, மறுநாள் காலை தனது வீட்டு மாடியிலிருந்து குடிபோதையில் விழுந்து ரிதேஷ் இறந்துவிட்டதாக, ரிதேஷ் கணக்கு வழக்கை ‘முடித்து’ விடுகிறார் சீகல்.

இப்படியாக சிக்கல் நிறைவுபெற, சீகல் தன் தொழிலும், மார்வா தன் தொழில் மற்றும் சாமியார் பக்தியிலும் மூழ்க, சீகலில் இருந்து விலகிய ஆலோசகர், தனது துறையில் முன்னேற, பலிகடாவாக்கப்பட்ட ‘நிஷி’ மட்டும் ‘பூச்சி மருந்து கலக்கப்பட்ட கோலாபானம்’ வழக்கில் தொடர்ந்து கோர்ட் படியேறிவருகிறார் தனது குழந்தையுடன்!

முதலாளித்துவம் தனது நோக்கத்தில் தெளிவாகவே இருக்கிறது. லாபம் ஒன்றே அதன் குறிக்கோள். அதற்காகப் பயன்படும் யாரையும் பயன்படுத்திக் கொள்ளும். பின்னர் ஏறி மிதித்துக் கொல்லவும் தயாராகிவிடும். இன்றைய, கார்ப்பரேட் உலகம் என்ற பெயரில் நடுத்தர வர்க்கத்தின் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் அட்டைகளின் மறுபக்கத்தை படம் பிடித்த மதூர் பண்டார்கரை என்ன பாராட்டினாலும் தகும். அதற்குள் பன்னாட்டு நிறுவனம், பொருளாதார வளம் என்னும் பெயரில் பஞ்சாயத்து பண்ணும் அரசு, பெப்சி, கோகோகோலா மனித அழிப்பு நடவடிக்கைகள் என அத்தனையையும் தோலுரிக்-கின்றது. நீ வளர வேண்டுமா, உனக்குப் பணம் வேண்டுமா, செய்யத் தயங்கக் கூடாதவை மூன்று என்கிறது முதலாளித்துவம்.

1. காட்டிக் கொடு
2. போட்டுக் கொடு
3. கூட்டிக் கொடு

உன் நிறுவன பணியாளனை தொடர்ந்து உறிஞ்ச வேண்டுமா? அவன் மனம் குளிரும்படி “ஊத்திக் கொடு, ஆடவிடு, கோர்த்துவிடு” என்று தன் லாபவெறியால் அம்மணமாக ஆடுகிறது முதலாளித்துவம் என்னும் நவீன ‘கார்ப்பரேட்’.அத்தகைய புகழ் வெளிச்ச, பண உலகின் கரும் பக்கத்தை புரட்டிக் காட்டிய மதூர் பண்டார்கரின் ‘கார்ப்பரேட்’, இன்றைய இளைஞர்களால் அவசியம் பார்க்கப்பட வேண்டிய படம். அதிலும் குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்துறை, மேலாண்துறை, நிர்வாகத் துறைகளில் நல்ல சம்பளம் என்ற போதையில் தன்னிலை மறக்கத் துவங்கியிருக்கும் இளைய தலைமுறை கற்கவேண்டிய பாடம்!

வரலாற்றில் இன்று - Today in History - டிசம்பர் 4


  • இந்தியா - கடற்படையினர் தினம்
  • 1639 - ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
  • 1791 - உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி ஒப்சேர்வரின் முதலாவது இதழ் வெளிவந்தது.
  • 1829 - ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் சதி முறையை ஒழிக்க ஆளுநர் வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது
  • 1918 - முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய அமெரிக்க அதிபர் வூட்ரோ வில்சன் பிரான்ஸ் சென்றார். பதவியில் உள்ள அமெரிக்க அதிபர் ஒருவர் ஐரோப்பா சென்றது இதுவே முதற் தடவையாகும்.
  • 1945 - ஐக்கிய அமெரிக்கா ஐநாவில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து செனட் அவை வாக்களித்தது.
  • 1959 - ஐக்கிய அமெரிக்காவின் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் சாம் என்ற குரங்கு 55 மைல்கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் பூமி திரும்பியது.
  • 1971 - இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய ஐநா பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது.
  • 1971 - பாகிஸ்தானின் கடற்படையினரையும் கராச்சி நகரையும் இந்தியக் கடற்படையினர் தாக்கினர்.
  • 1976 - ஆச்சே விடுதலை இயக்கம் அமைக்கப்பட்டது.
  • 1977 - தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நொறுங்கியதால் 100 பேர் பலியாயினர்.
  • 1981 - டில்லியிலுல்ல வரலாற்றுச் சின்னமான குதுப்மினார் கோபுரத்தை ஏறிப்பார்க்கச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 45 பேர் மாண்டனர்.
  • 1991 - டெரி அண்டர்சன் என்ற அமெரிக்க ஊடகவியலாளர் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளின் பின்னர் பெய்ரூட்டில் விடுவிக்கப்பட்டார்
  • 1991 - ஐக்கிய அமெரிக்காவின் பான் ஆம் விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.
  • 1992 - ஐக்கிய அமெரிக்கா சோமாலியாவுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்பியது.

வரலாற்றில் இன்று - Today in History - டிசம்பர் 3

  • உலக ஊனமுற்றோர் நாள்.
  • 1592 - "எட்வேர்ட் பொனவென்ச்சர்" என்ற ஆங்கிலக் கப்பல் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது.
  • 1818 - இலினோய் ஐக்கிய அமெரிக்காவின் 21வது மாநிலமானது.
  • 1903 - சேர் ஹென்றி பிளேக் ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை வந்து சேர்ந்தார்.
  • 1904 - வியாழனின் ஹிமாலியா என்ற சந்திரன் சார்ல்ஸ் டில்லன் பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1912 - பால்கன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல்கேரியா, கிரேக்க நாடு, மொண்டெனேகிரோ, மற்றும் சேர்பியா ஆகியன துருக்கியுடன் போர் நிறுத்த உடன்பாடு கண்டன.
  • 1959 - திரு Zubir Said எழுதிய சிங்கப்பூரின் தேசிய கீதம் அறிமுகப்படுத்தப்ட்டது.
  • 1967 - தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் கிறிஸ்டியன் பார்னார்ட் தலைமையில் உலகின் முதலாவது இருதய மாற்றுச் சிகிச்சை 53 வயது லூயிஸ் வாஷ்கான்ஸ்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
  • 1971 - இந்திய-பாகிஸ்தான் போர், இந்தியா கிழக்கு பாகிஸ்தானை முற்றுகையிட்டது. முழுமையான போர் ஆரம்பித்தது. கிழக்கு பாகிஸ்தான் தனியாகப் பிரிந்து பங்களாதேஷ் உருவானது.
  • 1973 - வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
  • 1976 - ரெகே பாடகர் பொப் மார்லி இரு தடவைகள் சுடப்பட்டுக் காயமடைந்தார். ஆனாலும் இவர் இரு நாட்களின் பின்னர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
  • 1984 - இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்
  • 1989 - மால்ட்டாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோர் பனிப்போர் முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக அறிவித்தனர்.
  • 1997 - நிலக் கண்ணிவெடிகளைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவது தடை செய்யும் ஒப்பந்தத்தில் 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியன இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
  • 1999 - செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்ட Mars Polar Lander இன் தொடர்புகளை நாசா இழந்தது.
  • 2007 - இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.

Saturday, December 1, 2012

கல்லறைத் தூக்கத்தில் இருந்து எழுப்பப்பட்ட பிரபலங்கள்

 ஆலிவர் கிராம்வெல் 

விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா என்ற சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்வதற்காகவே தற்போது யாசர் அராபத்தின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது. ஆனால் வேறு பல தலைவர்களின் உடல்கள் வேவ்வேறு காரணங்களுக்காக கல்லறைகளில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
 
ஆலிவர் கிராம்வெல்
இங்கிலாந்தில் முடியாட்சியை ஒழித்து குடியாட்சியை ஒரு குறுகிய காலத்துக்கு கொண்டு வந்தவர் ஆலிவர் கிராம்வெல். படை வீர்ராகவும், ராஜ தந்திரியாகவும் திகழ்ந்த இவர் 1658 ஆம் ஆண்டு மரணித்தார். அரச மரியாதையுடன் அவரது உடல் புகழ் பெற்ற வெஸ்ட்மின்ஸ்ட்டர் தேவாலயத்தில் புதைக்கப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு முடியாட்சி மீண்டும் கொண்டுவரப்பட்ட பிறகு இவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு தலை வெட்டி சிதைக்கப்பட்டது. பிறகு அவரின் உடல் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் ஒரு கொலை களத்தின் அருகே வீசப்பட்டது. ஆலிவர் கிராம்வெல்லின் தலை ஒரு கம்பில் கட்டப்பட்டு வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலின் மாடியில் வெளியில் தெரியும் படி வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தலை 1815 இல் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இது ஆலிவர் கிராம்வெல்லின் தலை என்றே உறுதிப்படுத்தப்பட்டது.



சார்லி சாப்ளின்
புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்பட நடிகர் சார்லி சாப்ளின் தனது வாழ்வின் கடைசி 25 ஆண்டுகளை சுவிட்சர்லாந்தில் கழித்தார். அவர் இறந்த பிறகு கோசிய சூர் வேவி என்ற கிராமத்தில் புதைக்கப்பட்டார். இரண்டு திருடர்கள் 1978ஆம் ஆண்டு அவரின் உடலை அங்கிருந்து தோண்டி எடுத்துச் சென்றனர். பெரும் பணம் கொடுத்தால்தான் உடலைத் தர முடியும் என்று அவர்கள் சார்லி சாப்ளினின் வழக்கறிஞர்களோடு பேரம் பேசினர். மூன்று மாதங்களுக்குப் பிறகு போலந்து மற்றும் பல்கேரியாவில் இருந்து அகதிகளாக வந்திருந்த அந்த இரு திருடர்களும் பிடிபட்டனர். சார்லி சாப்ளினின் உடல் மீட்கப்பட்டது அதே இடத்தில் மீண்டும் புதைக்கப்பட்டது. ஆனால் இரவில் யாரும் திருடிச் சென்று விடக் கூடாது என்ற நோக்கில் சார்லி சாப்ளினின் கல்லறை இம்முறை கான்க்ரீட்டால் மூடப்பட்டது.


 கிறிஸ்டபர் கொலம்பஸ்
அமெரிக்க கண்டத்துக்கு கடல் வழி கண்டு பிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ்சின் நிலை இன்னமும் மோசமானது. தனது உடலை அமெரிக்காவில் புதைக்க வேண்டும் என்று உயில் எழுதிவிட்டு கொலம்பஸ் 1506ஆம் ஆண்டு இறந்துபோனார். ஆந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் தகுந்த தேவாலங்கள் இல்லை. எனவே அவரது உடல் ஸ்பெயின் வல்லாடோலிட்டில் புதைக்கப்பட்டது. அதன் பிறகு சிவைல் மடாலயத்துக்கு அது மாற்றப்பட்டது. 1542 ஆம் ஆண்டு அந்த உடல் அங்கிருந்து எடுக்கப்பட்டு ஹிஸ்பனியோலா என்ற இடத்துக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகு அது தற்போது டொமினிகன் குடியரசின் தலைநகராக இருக்கும் சான்டோ டொமின்கோவில் புதைக்கப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் முடிவில் ஸ்பெயின் ஹிஸ்பானியோலாவின் மேற்குப் பகுதிகளை பிரான்சிடம் இழந்தது. அதன் காரணமாக கிறிஸ்டோபர் கொலம்பஸ்சின் உடல் கியூபாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

கியுபா 1898ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு கொலம்பஸ் அவர்களின் உடல் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடைசி முறையாகக் கடந்து சேவைலில் இருக்கும் தேவாலயத்துக்கு கொண்டு வந்து புதைக்கப்பட்டது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் உடல் குறித்த அதிகார பூர்வ வரலாறு இப்படி இருக்க – டொமினிகன் குடியரசின் தலைநகரில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்று பெயர் பொறிக்கப்பட்ட ஒரு பெட்டியில் இருந்து சில எலும்புகள் எடுக்கப்பட்டன. அவை அங்கே கொலம்பஸ் நினைவகத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஆயினும் சீவைலில் அருகே புதைக்கப்பட்ட கொலம்பஸ்சின் சகோதரர் டிகோவின் டி என் ஏவும் அங்கே புதைக்கப்பட்ட கோலம்பஸ்சின் உடல் என்று கருதப்படும் உடலின் டி என் ஏவும் ஒத்துப்போவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
 
சேகுவேரா
சேகுவேரா

அர்ஜென்டினாவில் பிறந்த கியுப நாட்டுப் புரட்சியாளரான சேகுவேரா 1967ஆம் ஆண்டு போலிவியாவில் பிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் உடல் எங்கே புதைக்கப்பட்டது என்பது தொடர்பாக பல ஆண்டுகள் ரகசியம் காக்கப்பட்டது. சே சுடப்பட்டதில் தொடர்புடைய ஒரு பொலிவிய இராணுவ ஜெனரல் 1995ஆம் ஆண்டில் சேகுவேராவின் உடல் ஒரு விமான நிலையத்தின் ஒடு பாதை அருகே புதைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கப் பிறகு அவரின் உடல் எடுக்கப்பட்டு கியுபாவுக்கு கொடுக்கப்பட்டது. சேகுவேராவுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகத்தில் அவ்வுடல் தற்போது பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தோண்டி எடுக்கப்பட்டது சேவின் உடலா என்பது குறித்து இன்னமும் சந்தேகம் இருக்கிறது.