Friday, November 30, 2012

வரலாற்றில் இன்று - டிசம்பர் 1


  • உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்.
  • 1420 - இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான்.
  • 1640 - போர்த்துக்கல் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. நான்காம் ஜொவாவோ மன்னனானான்.
  • 1783 - ஹைட்ரஜன் வாயு நிரம்பிய பலூனில் சார்லஸ் எயினி எனும் இருவர் இரண்டு மணி நேரம் பறந்து காண்பித்தனர்
  • 1822 - முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசன் ஆனான்.
  • 1875 - வேல்ஸ் இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார்.
  • 1918 - ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது.
  • 1918 - சேர்பிய, குரொவேசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் யூகொஸ்லாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது.
  • 1924 - எஸ்தோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
  • 1939 - புகழ் பெற்ற ஆங்கிலத் திரைப்படமான "Gone with the wind" முதன் முதலில் நியூயார்க்கில் திரையிடப்பட்டது.
  • 1958 - பிரான்சிடம் இருந்து மத்திய ஆபிரிக்கக் குடியரசு விடுதலை பெற்றது
  • 1959 - பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
  • 1960 - கொங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார்.
  • 1961 - இந்தோனீசியாவின் மேற்கு நியூ கினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது.
  • 1963 - நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.
  • 1965 - இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.
  • 1971 - இந்திய இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.
  • 1973 - பப்புவா நியூ கினி ஆஸ்திரேலியாவிடம் இருந்து சுயாட்சி பெற்றது.
  • 1981 - எயிட்ஸ் நோக்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டது.
  • 1982 - முதலாவது செயற்கை இருதயம் யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க் என்பவருக்குப் பொருத்தப்பட்டட்து.
  • 1989 - பனிப்போர்: கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற கிழக்கு ஜேர்மனி நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது.
  • 1989 - பிலிப்பீன்ஸ் அதிபர் கொரசோன் அக்கீனோவை பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
  • 1990 - பிரிட்டனையும், பிரான்சையும் இணைக்கும் Channel Tunnel எனப்படும் கடலடி சுரங்கப் பாதை தோண்டும் பணி நிறைவு பெற்றது.
  • 2006 - இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் காயமெதுவுமின்றி தப்பினார்.

No comments:

Post a Comment